tamilnadu

கடலூர் மற்றும் நாகர்கோவில் முக்கிய செய்திகள்

ஊராட்சி வார்டுகளில்  சிபிஎம் செயலாளர்கள் வெற்றி

கடலூர், ஜன.3- நடந்து முடிந்த ஊராக உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சி  வார்டு 3-க்கு மார்க்சிஸ்ட் கட்சி வை.சுப்பரமணியன், மணிக் கொல்லை ஊராட்சி 5வது வார்டில் கிளைச் செயலாளர் இ. ஜெயக்குமார், நஞ்சமகத்து வாழ்க்கை ஊராட்சி 5வது நவாப்ணுபேட்டை கிளைச் செயலாளர் எஸ்.முத்துகுமார், உத்தமசோழமங்கலம் ஊராட்சி வார்டு 3-க்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் பி.விஜயா ஆகியோர் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.

பெண்கள் குறித்து அவதூறு பேச்சு அமமுக நிர்வாகி மீது  3 பிரிவுகளில் வழக்கு

தூத்துக்குடி, ஜன.3- கடம்பூர் அருகே பெண்கள் குறித்து அவதூறாக பேசிய தாக அமமுக மாநில நிர்வாகி மாணிக்கராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா. இவர், அமமுக தேர்தல் பிரிவு செய லாளராகவும், தென் மண்டல பொறுப்பாளருமாக உள்ளார். கடந்த 26 ஆம் தேதி காமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின் பேசும்போது, சாதி ரீதி யாகவும், பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காமநாயக்கன்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த செந்தூர் பாண்டியன் மனைவி பொன்னுலட்சுமி (24) என்பவர் கயத்தார் காவல் நிலையத்தில் புகார் செய்துள் ளார். அவரது புகாரின் பேரில் மாணிக்கராஜா மீது 153ஏ, பெண்களை இழிவுபடுத்துதல், சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

கஞ்சா, மது விற்ற 3 பேர் கைது

நாகர்கோவில், ஜன. 3- குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் மது விற்ற வர்களை கண்காணித்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.  கொல்லங்கோடு காவல்துறையினர் மணலி பகுதி யில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது அங்கு சந்தே கப்படும் படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார். இதை யடுத்து அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.  அதில் அவர், கேரள மாநிலம் தெங்கிலாவு பகுதியை  சேர்ந்த சஜின் ஜெயக்குமார் (22) என்பது தெரியவந்தது.  அவரிடம் மேற்கொண்ட சோதனையில் அவர் மறைத்து  வைத்திருந்த பையில் அரை கிலோ கஞ்சா இருந்தது  தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் இரணியல் ரெயில்வே பாலம் அருகில் வாலிபர் ஒருவர் அனுமதி இன்றி மது விற்றது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் தலக்குளம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (40) என் பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்த னர். நெட்டாங்கோடு பகுதியில் அனுமதி இன்றி மது விற்றதாக செல்வகுமார் (42) என்பவரை கைது செய்து அவரி டம் இருந்த 115 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

வணிகர்களை மிரட்டி லஞ்சம் பெறும் அதிகாரிகள்: விக்கிரமராஜா 

வேலூர், ஜன.3- உணவு பாதுகாப்புத் துறையின் அதிகாரிகள் லஞ் சத்தை பெறுவதற்காகவே சோதனைகளை நடத்து கின்றனர். பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டுமானால் நாடு முழுவதும் பிளாஸ் டிக்கை தடை செய்ய வேண்டும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்  நாடு வணிகர் சங்கப் பேர மைப்பின் தலைவர் விக்கிர மராஜா தெரிவித்தார். வேலூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பின் கூட்டம் மற்றும்  பொறுப்பாளர்கள் பதவி யேற்பு விழா மாநிலத் தலை வர் விக்கிரமராஜா தலை மையில் நடைபெற்றது. இதில் மக்களவை உறுப்பி னர் கதிர் ஆனந்த், தமிழ்நாடு  ஓட்டல்கள் சங்க மாநிலத் தலைவர் வெங்கடசுப்பு, விஐடி வேந்தர் விசுவநாதன், வணிகர் சங்க நிர்வாகிகள் இரா.ப.ஞானவேலு, அருண்  பிரசாத் மற்றும் வேலூர்,  திருப்பத்தூர், ராணிப் பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த திரளான வணிகர் சங்க  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பின்  னர் விக்கிரமராஜா செய்தி யாளர்களிடம் கூறுகை யில்,“தற்போது வணிகர் களை மிரட்டி அதிகாரிகள் லஞ்சம் பெறுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். குறிப்பாக உணவு பாதுகாப்பு  அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் சோதனை நடத்தி எங்களை துன்புறுத்து கிறார்கள். ஆனால் பொருட்  கள் தயாரிப்பு நிறுவனங்க ளில் சோதனை நடத்தி அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை” என்றார். ஆன் லைன் வர்த்த கத்தால் சில்லரை வணி கத்தில் இந்திய வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மத்திய அரசு ஆன்  லைன் (அமேசான், பிளிப்கார்ட்) வர்த்தகத்தை தடை செய்யக் கோரி வரும் 6 ஆம் தேதி தில்லியில் கூடி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிக்க இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

;