மனைவியை கொன்ற கணவர்
பூந்தமல்லி, அக்14- பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் அம்மன் நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் கிட்டப்பன் (38). இவர் அதே பகுதியை சேர்ந்த சுமதி (25) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு வீரமணி (5), தரணி (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சுமதி, குழந்தை களுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் சுமதியின் கணவர் கிட்டப்பன் திங்களன்று (அக்.14) காலை பூந்தமல்லி காவல்நிலையத்துக்குச் சென்று சரண் அடைந்தார். அப்போது தனது மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டதாக காவல்துறை யிடம் கூறியுள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, சுமதி தனது மகனை அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு திரும்பும் வழியில் கணவர் இருந்த வீட்டுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிட்டப்பன், கத்தியால் சுமதியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் சுமதி அதே இடத்தில் இறந்தார். இதையடுத்து கிட்டப்பனை பூந்தமல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
திருவில்லிபுத்தூர், அக்.14- விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி காவல்துறை யினர் திருட்டு வழக்கு தொ டர்பாக குற்றவாளிகளைத் தேடி திவில்லிபுத்தூர்- இராஜ பாளையம் சாலையில் உள்ள வேலங்குளம் கண்மா ய்க்கு சென்றனர். அப்போது ஒரு துணிப்பையில் பத்து நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் நான்கு கொ ய்யாப் பழங்களும் முள் புதரில் கிடந்தது. இதைக் கைப்பற்றிய காவல்து றையினர் விருதுநகர் வெடி குண்டு தடுப்பு மற்றும் செய லிழப்பு பிரிவுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் மதுரை வெடிகுண்டு செய லிழப்பு சிறப்புப் பிரிவு காவ ல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.