கண்டுகொள்ளாத அதிகாரிகள்
மதுரை, ஜூன் 15- மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் நான்காயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டி ருந்த மக்காச்சோளம் வறட்சியாலும், புழு தாக்குதலாலும் முற்றாக அழிந்துவிட்டது. வேளாண் துறை அதிகாரிகள் அழிந்த பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கவேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறத்தியுள்ளது. இது குறித்து சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கை:- பேரையூர் தாலுகாவைச் சுற்றி 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு நான்காயிரம் ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது. கடும் வறட்சி, புழு தாக்குதலால் பயிர் கருகி அழிந்துவிட்டது. அழிந்த பயிர்களுக்கு வெறும் ரூ. 3 ஆயிரம் மட்டும் தமிழக அரசு இழப்பீடாக அறி வித்துள்ளது. இது விவசாயிகளுக்கு சென்ற டைந்ததாகத் தெரிகிறது.
2018-2019-ஆம் ஆண்டிற்கான பயிர்காப்பீட்டுத் தொகை பேரையூர் தாலுகா வில் பத்து கிராமங்களுக்கும மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வறட்சி ஏற்பட்டா லும், கடுமையாக மழை பெய்தாலும் விவ சாயிகள் மட்டுமே உணவுப்பொருட் களை உற்பத்தி செய்வதில் தவறாது ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், அவர் களை தமிழக அரசோ, வேளாண் அதிகாரிகளோ கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. மக்காச்சோளம் பயிரிட்டு கருகிவிட்ட நிலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென மதுரை ஆட்சியர், வேளாண் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை நட வடிக்கை எடுக்கவில்லை. கொரோனா காலத்தில் கடும் நெருக்கடி யில் உள்ள விவசாயிகளுக்கு உரிய பயிர் இன்சூரன்ஸ் தொகையை வழங்கி விவ சாயிகளின் கண்ணிரைத் துடைக்கவேண்டும். மேலும் மக்காச்சோள விவசாயிகள் வாங்கி யுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து அவர்கள் தொடர்ந்து விவசா யத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள புதிதாக கடன் வழங்கவேண்டும். கூட்டு றவு சங்கங்களில் ரேஷன் அட்டைகளை காட்டி ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி யொன்றில் அறிவித்தார். இந்த அறிவிப்பை வேளாண் சங்கங்களுக்கும் பொருத்தி விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும்.