மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி வானகரம் கிளை உறுப்பினர் ஜி.சங்கரன் இணையர் எஸ்.ஜெயா (வயது 62) உடல் நலக்குறைவால் செவ்வாயன்று (ஆக.26) காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜி.செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணசெல்வி, வி.தாமஸ், மதுரவாயல் பகுதிச் செயலாளர் டி.அரவிந்தன் மற்றும் காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து புதனன்று (ஆக.27)அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.