இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் இன்று (13.09.2025) சென்னை, சூளைமேடு அமீர்ஜான் தெருவில் உள்ள சென்டிரல் வங்கி ஊழியர் சங்க விருந்தினர் விடுதி - கூட்ட அரங்கில் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தேசியச் செயலாளர்கள் டாக்டர் கே.நாராயணா, ஆனி ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநிலக் குழு உறுப்பினர்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்கள் என மொத்தம் 110 பேர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர், மூன்று நிரந்தர அழைப்பாளர்கள், 31 உறுப்பினர்கள் கொண்ட மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில நிர்வாகக் குழுவில்,
1).மூ.வீரபாண்டியன்
2).நா.பெரியசாமி
3).டி.எம்.மூர்த்தி
4).பி.பத்மாவதி
5).க.சந்தானம்
6).வஹிதா நிஜாம்
7).வை.சிவபுண்ணியம்
8).எம்.ரவி
9).தி.ராமசாமி
10).எம்.ஆறுமுகம்
11).மு.கண்ணகி
12).டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத்
13).வை.செல்வராஜ்
14).டி.ராமச்சந்திரன்
15).எம்.லகுமையா
16).பி.எஸ்.மாசிலாமணி
17).க.மாரிமுத்து
18).எம்.ராதாகிருஷ்ணன்
19).மு.அ.பாரதி
20).அ.மோகன்
21).எஸ்.கலைச்செல்வம்
22).சு.மோகன்குமார்
23).முத்து.உத்திராபதி
24).சு.இசக்கிதுரை
25).த.செங்கோடன்
26).எஸ்.தேவராஜன்
27).பி.துரை
28).பொ.லிங்கம்
29).க.பாரதி
30).அ.பாஸ்கர்
31).திருச்சி.எம்.செல்வராஜ்
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நிரந்தர அழைப்பாளர்களாக த.லெனின், கே.எம்.இசாக் மற்றும் சி.சிவசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக வட சென்னை வியாசர்பாடி மகசின்புரம் பகுதியைச் சேர்ந்த மு.வீரபாண்டியன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ராணுவ வாகனம் ஓட்டுநர் குடும்பத்தில் 1961 டிசம்பர் 31 பிறந்த மு வீரபாண்டியன், அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி பெற்றவர்.
சிறுவயதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தில் இணைந்து அமைப்பு ரீதியாக செயல்படத் தொடங்கினார். அந்த அமைப்பின் கிளைச் செயலாளர், பகுதிக் குழு செயலாளார், மாவட்டச் செயலாளர், மாநிலச் செயலாளர் என பல நிலைகளில் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டவர்.
வேலையின்மை பிரச்சனையை முன் வைத்து, இந்தியாவைக் காப்போம், இந்தியாவை மாற்றுவோம் என்ற கோரிக்கை மீது கன்னியாகுமரியில் இருந்து புதுதில்லி வரை சைக்கிள் பரப்புரை மேற்கொண்ட அணியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.