tamilnadu

img

வங்கக் கடல்: காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இது அடுத்த 24 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரத்தை அடையும் என்றும், இதன் தீவிரத் தன்மை குறைவாகவே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.