7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்:
காங்கிரஸ் வெளியிட்டது!
சென்னை, மார்ச் 24 - 18-ஆவது மக்களவைத் தேர்தலை யொட்டி, திமுக தலைமையிலான கூட் டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் - புதுச் சேரியில் மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், புதுச்சேரிக்கு மட்டும் வைத்திலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மீதமுள்ள 9 தொகுதிகளில்7 தொகுதி களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

இன்று நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்
சென்னை, மார்ச் 24- மக்களவைத் தேர்தலில் போட்டி யிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மார்ச் 22 அன்று தனது பரப்பு ரையை திருச்சியில் தொடங்கினார். அதைத் தொடர்ந்து தஞ்சை, நாகை தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரித்து, சனிக்கிழமையன்று கொர டாச்சேரியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், சென்னை திரும்பினார்.
ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு, திங்களன்று (மார்ச் 25) சென்னையில் இருந்து விமா னம் மூலம் தூத்துக்குடி செல்லும் முதல் வர், அங்கிருந்து கார் மூலம் நாங்கு நேரி சென்று அங்கு நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திருநெல் வேலி, கன்னியாகுமரி தொகுதி காங்கி ரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.
கனிமொழிக்கு பிரச்சாரம் மார்ச் 26 அன்று (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி, இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.