பட்டியல், பழங்குடி இன மக்கள் சுடுகாட்டிற்கு பாதை அமைத்திடுக
ததீஒமு செங்கை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
செங்கல்பட்டு, ஆக.4- பட்டியல், பழங்குடியின மக்களின் சுடுகாடுகளுக்கு பாதை அமைத்து தர வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செங்கல்பட்டு மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. முன்னணியின் செங்கல்பட்டு மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் இ.சங்கர் தலைமையில் சிங்கபெருமாள் கோயிலில் ஞாயிறன்று (ஆக.4) நடைபெற்றது. வண்டலூர் பகுதி தலைவர் டி.நடராஜன் வரவேற்றார், மாவட்ட துணைத் தலைவர் மு.முனிச்செல்வம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை துவக்கி வைத்து நாடக கலைஞர் பிரளயன் பேசினார். மாவட்ட செயலாளர் க.புருசோத்தமன் வேலை அறிக்கையையும் மாவட்ட பொரு ளாளர் ஏ.இராமலிங்கம் வரவு செலவு அறிக்கையையும் சமர்பித்தனர். தீர்மானங்களை முன்மொழிந்து சிஐடியு மாவட்ட பொருளாளர் எம்.கலைச்செல்வி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.வாசுதேவன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் எம்.அழகேசன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் க.ஜெயந்தி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் வி.நாராயணன், மாற்று திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தாட்சாயணி, மின் திட்ட செயலாளர் பி.தேவக்குமார், தமு எகச மாவட்ட தலைவர் இ.சங்கரதாஸ், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஜீவானந்தம், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.தயாநிதி உள்ளிட்ட பலர் பேசினர். மாநாட்டை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.எஸ்.பாரதிஅண்ணா, மக்கள் கண்காணிப்பகம் மாநில ஒருங்கிணைப்பாளர் இ.ஆசீர், சமுதாய ஒற்றுமை இயக்கத்தின் மாவட்ட தலைவர் க.பூபாலன், அம்பேத்கார் ஜனசக்தி நிர்வாகி ஏ.டி.விஸ்வநாத் உள்ளிட்ட பலர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து ததீஒமு மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன் பேசினார். காட்டாங்கொளத்தூர் பகுதி செயலாளர் பி.சண்முகம் நன்றி கூறினார். தீர்மானங்கள் சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும், சமுக பொருளாதார நீதியை உறுதி படுத்த வேண்டும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், பள்ளி மற்றும் ஊராட்சிகளில் நிலவும் சாதிய பாகுபாடுகளை கலைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், தணியார் துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும்,தலித் கிருத்துவர்களை எஸ்சி பட்டியலில் இணைத்திட வேண்டும், அரசு கூர்நோக்கு இல்லங்கள் குறித்து நீதியரசர் சந்துரு தலைமையில் நடைபெற்ற ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கையை வெளியிட வேண்டும். மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் வழங்க வேண்டும் எனபன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு மாவட்ட தலைவர் இ.சங்கர், செய லாளர் ஏ.இராமலிங்கம், பொருளாளர் டி.நட ராஜ் உள்ளிட்டோர் அடங்கிய 29 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப் பட்டது.
சிஐடியு வடசென்னை மாவட்ட மாநாடு ஆகஸ்ட் 15, 16 தேதிகளில் நடைபெறுவதையொட்டி ஆர்.கே. நகரில் பல், கண், நுரையீரல் பல்வேறு மருத்துவ பரிசோதனை முகாம் ஞாயிறன்று (ஆக. 3) நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.லோகநாதன், அ.விஜயகுமார், பகுதிச்செயலாளர் வெ.ரவிக்குமார், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, ஏ.விஜய் (வாலிபர் சங்கம்), எம்.மாரிமுத்து (ஆட்டோ சங்கம்), நிர்வாகிகள் ஒய்.முகமது உசேன், கே.சாதிக் பாஷா, நா.திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.