tamilnadu

img

‘இந்தியாவை பாதுகாப்போம்’ இயக்கம் மின்வாரிய ஓய்வூதியர்களும் பங்கேற்பு....

சென்னை:
‘இந்தியாவை பாதுகாப்போம்’ என்ற மாபெரும் இயக்கத்தில், மின் வாரிய ஓய்வுபெற்றோர் அமைப்பும் பங்கேற்கிறது.தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்ற நல அமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஆக.5 அன்று மாநிலத் தலைவர் என்.சின்னசாமி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அமைப்பின் பொது செயலாளர் எஸ்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தொழிலாளர் சட்டங்களை முதலீட்டாளர்களுக்கு சாதகமான மாற்றுவது, பொதுத் துறைகளை விற்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரால் விவசாயிகள், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த பின்னணியில் இந்தியாவைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் தமிழகத்தில் ஆக.8, 10 தேதிகளில் மாவட்ட வாரியாக நடைபெறும் இயக் கத்தில் மின்வாரிய ஓய்வுபெற்றோர் அமைப்பும் பங்கேற்கிறது.

தன்னிச்சையான செயல்பாடு
தமிழக மின்வாரியத்தில் புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள வாரியத் தலைவர் தன்னிச்சையான செயல்பட்டோடு  தொழிற்சங்கங்களை சந்திக்க மறுக்கிறார். பதவிகளை உபரி என்று சொல்லி ரத்து செய்ய முயற்சிக்கிறார். விதிகளுக்கு மாறாக ஊர்மாற்றம், தற்காலிக வேலை நீக்கம் போன்ற கொடூர நடவடிக்கையில் ஈடுபடுகிறார். இந்த போக்கை மாற்றிக் கொள்ள வலியுறுத்தியும், தமிழக அரசு உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்தக் கோரியும் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆக.13 அன்று மாவட்ட வாரியாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் கலந்து கொள்வார்கள்.

நிலக்கரி சுரங்கங்கள் தாரைவார்ப்பு
41 க்கும் மேற்பட்ட நிலக்கரி சுரங்கங் களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மின் வினியோகத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதையும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வெட்டுவது, மானியங்களை ரத்து செய்வது போன்ற விதிகள் அடங்கிய சட்டத் திருத்தத்தை கைவிட வலியுறுத்தி ஆக. 18 அன்று இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது. தேசிய மின் சார தொழிலாளர் மற்றும் பொறியாளர் கூட்டமைப்பு அறைகூவலின்படி, இந்த இயக்கத்திலும் ஓய்வூதியர் பங்கேற் கின்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;