tamilnadu

img

குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று பாடம் நடத்தகோரும் சுற்றறிக்கையை திரும்பப் பெறுக.... இடைநிலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை:
ஆசிரியர்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று பாடம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியாளர்கள் வாய்மொழி மூலம் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.என்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் மாநிலப் பொதுச்செயலாளர் அ.சங்கர் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத் துள்ள அறிக்கையில் மாணவச் செல்வங்களுக்கு கல்விகற்க எச்சூழலிலும் தயாராக உள்ளோம்.   பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு
எழுதுவதற்கு ஏதுவாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். நேரிடை பயிற்சிதான் 100 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும். ஆனாலும் ஓரளவிற்கு சூழ்நிலைக்கேற்ப ஆசிரியர்கள் மாணவர்களோடு தொடர்பு கொண்டு வருகிறோம். மேலும் என்.டி.எஸ்.இ, என்.எம்.எம்.எஸ் போன்ற தேசியத்திறனாய்வுத் தேர்விற்கு மாணவர் களை தயார் செய்து தேர்வு எழுதியுள்ளார்கள். அவ்வப் போது சிறுசிறு தேர்வுகள் மூலமும் மாணவர்களை தயார்செய்துவருகின்றோம்.

இந்நிலையில்  குடியிருப்புக் குள் சென்று மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தர வேண்டும் என்று ஆசிரியர்களை நிர்பந் தப்படுத்துவது எவ்வகையில் நியாயம். இது சரியாக அமையுமா மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

மறுபரிசீலனை செய்க!
அரசுப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி உயர்நிலைப் பள்ளியில் பொறுத்த வரையிலும் கிட்டத் தட்ட 20 கி.மீ தொலைவில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் அதனடிப்படையில் கிட்டத்தட்ட பதினைந்து இருபது கிராமங்கள் அடங்கிய பகுதியாக  அமையும். அவ்வாறு இருக் கும் பட்சத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு ஒவ்வொரு ஊருக்கும் சென்று மாணவர்களை கண்காணிக்க முடியும்?  மாணவர்கள் எந்த இடத்தில் அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்?  பொது இடத்தில் கற்பிக்க முடியுமா? பல இடர்பாடுகள் நிறைந்த சூழலில் எவ்வாறு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க முடியும். எனவே  மாவட்ட ஆட்சியாளர்களின்  வாய்மொழி உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சுழற்சி முறையில் பள்ளி திறப்பதற்கு ஆணை பிறப்பித்தால் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.