ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்திற்கும் மத்திய அரசு 7500 ரூபாயும், மாநில அரசு 5 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்க வேண்டும், பிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும், தனியார் மருத்துவமனைகளில் பிசிஆர் சோதனையை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் செவ்வாயன்று (ஜூன் 9) நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனையொட்டி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.