நாடாளுமன்ற மக்கள வைத் தேர்தலில் கேர ளத்தில் உள்ள ஆலத் தூர் தொகுதியின் எல்டிஎப் வேட்பாளராக மாநில அமைச்ச ரான கே.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப் பினரான இவர் 1996 முதல் சேலக்கரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். 2001 இல் எதிர்க்கட்சியின் தலைமை கொறடா. 2006 இல் வி.எஸ்.அச்சுதானந்தன் முதல்வ ராக பொறுப்பேற்ற போது இவர் சபாநாயகர்.
இரண்டு முறை அமைச்சர், 5 முறை சட்டமன்ற உறுப்பினர், சபாநாயகர் என பதவிகளில் அமர்ந்தபோதும், மேல் பூச்சு கூட இல்லாத சிறிய வீட்டில் தாயா ருடன் வசிக்கிறார். பைலட் வாக னமும் பாதுகாப்பும் (எஸ்கார்ட்) தேவைப்படாத அமைச்சர் இவர். ஊர் மக்களால் ராதேட்டன் (ராதா அண்ணன்) என அன்புடன் அழைக்கப்படும் இவர் திரு மணமாகாதவர். எளிமையே இவ ரது அடையாளம்.