tamilnadu

img

வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உண்ணாநிலைப் போராட்டம் வாபஸ்

சென்னை,மார்ச் 6- தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழி யாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்துக்கு அருகில், உயர் நீதிமன்றத்தில் தமிழ் மக்கள் இயக்கம், உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு ரைஞர் செயல்பாட்டுக் குழு ஆகியவற்றின் சார்பில் 25 பேர் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், புதனன்று (மார்ச் 6) சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சுப.வீர பாண்டியன், முன்னாள் நீதிபதி அரிபரந்தா மன் உள்ளிட்டோர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று வழக்கறிஞர் களை சந்தித்தனர்.

அப்போது, “வழக்கறிஞர்கள் போரா டும் கோரிக்கை இன்றல்ல நேற்றல்ல, கடந்த 50 ஆண்டுகால கோரிக்கையாகும். இதற்காக தொடர்ந்து ஏராளமான போராட்டங்கள் நடை பெற்றது. ஆனாலும், தற்போது போராடும் வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் பக்கபலமாக இருக்க்கிறார் எனவே, நிச்சயம் நமது கோரிக்கை நிறை வேற்றப்படும். அதற்கான அனைத்து முயற்சி களையும் முதலமைச்சர் மேற்கொள்வார்” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் ரகுபதி, முதலமைச்சரின் உத்தரவாதத்தை தெரிவித்தார். பிறகு, பழச்சாறு கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்தார்.