சென்னை, பிப். 16 - ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிராக வெள்ளியன்று (பிப்.16) நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள், விவ சாய அமைப்புகள் சார்பில் கிராமப் புற வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் பேரெழுச்சியுடன் நடை பெற்றது.
மோடி அரசின் தாக்குதல்
ஒன்றிய மோடி அரசு மக்க ளுக்கு எதிரான, ஜனநாயகத்திற்கு மாறான, விவசாயிகள், தொழிலா ளர் விரோத கொள்கைகளை கடை பிடித்து வருகிறது. விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் செல் கிறது. வேலையில்லாத திண்டா ட்டம் பெருகி உள்ளது. விவசாயி களின் விளை பொருட்களுக்கு வாக்குறுதி அளித்தபடி ஒன்றிய அரசு ஒன்றரை மடங்கு விலை தர வில்லை. கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் விரோதக் கொள்கைகளை கடைபிடித்து வருகிறது.
அத்தியாவசிய உணவுப் பொருட் களுக்கு ஜிஎஸ்டி விதித்துள்ளது. உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விதித்து விலைவாசி உயர்வை மேலும் கடுமையாக்கி உள்ளது.
வேலை பறிப்பு, தொழில்கள் மூடல்
ஒன்றிய அரசில் பல லட்சம் காலிப் பணியிடங்களை ஒழித்துள்ளது. பல லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
ஜிஎஸ்டி-யால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டு 5 கோடிப் பேர் வேலையிழந்துள்ளனர். புதிதாக உருவாகும் நிறுவனங்களில் காண்ட்ராக்ட், கேசுவல், அவுட்சோர்சிங் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலை என மாற்றியுள்ளது. அந்நிய நாட்டிலிருந்து கருப்புப் பணத்தை மீட்டு மக்களுக்கு வழங்காமல் உள்ளது.
விவசாயிகளுக்கு அளித்த வாக்கு றுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. விவசாய இடு பொருட்கள், உரம் போன்றவற்றிற்கான மானியம் வெட்டப்பட்டு வருகிறது. 44 சட்டங்களில் 29 சட்டங்களை 4 தொகுப்பு களாக்கி 15 சட்டங்களை நிர்கதியாக்கி விட்டது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி யடைந்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி மக்களை கசக்கிப் பிழிகிறது. அர சமைப்பு நிறுவனங்கள் சிதைக்கப்படு கிறது.
இந்த நிலையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்க வேண்டும், காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும், விவ சாயிகளுக்கு கொடுத்த வாக்கு றுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கேஎம்) இணைந்து பிப்.16 நாடு தழுவிய கிராமப்புற வேலை நிறுத்தத் திற்கு அறைகூவல் விடுத்தன.
பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
இந்த அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் பல்வேறு துறை சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கிராமப்புறங்கள் முழுவதிலும் விவ சாயிகள் - விவசாயத் தொழி லாளர்களின் வேலைநிறுத்தம் நடை பெற்றது. நாட்டின் 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. தலை நகர் தில்லி உட்பட அனைத்துப் பகுதி களிலும் தொழிலாளர்கள் - விவ சாயிகள் உள்பட அனைத்து அமைப்பு களும் பங்கேற்ற பெரும் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. (முழு விபரம் : 4ஆம் பக்கம்)
தமிழ்நாடு
இதனையொட்டி தமிழகம் முழுவதும் மறியல், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒருபகுதியாக சென்னை அண்ணாசாலையில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டி யுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, எம்எல்எப், எல்எல்எப், டபிள்யூபிடியுசி, எல்டியுசி, டியுசிசி உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்ற மறியல் நடைபெற்றது. கோரிக்கைகளை முழங்கியபடி அண்ணாசாலையில் மறியல் செய்யத் திரண்ட பல்லாயிரக்கணக்கானோரை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் சிலர் காய மடைந்தனர். இதனையும் மீறி மறியல் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தொமுச பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி., “ஒன்றிய பாஜக அரசு நாட்டைச் சீரழித்துள்ளது. வெள்ளை அறிக்கை என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக்கையை சமர்ப்பித்து ஏமாற்று கிறது. பாஜக அரசை ஆட்சியை விரட்டும் நோக்கத்தோடு இந்த போராட்டத்தை நடத்துகிறோம்” என்றார்.
“தில்லியில் விவசாயிகள் நடத்தும் மாபெரும் போராட்டத்தை ஒடுக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதையும் கண்டி த்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் ஒன்றிய அரசை வீழ்த்துவோம்” என்றார்.
இந்த போராட்டத்தில் கி.நடராஜன் (தொமுச), ஜி.சுகுமாறன் (சிஐடியு), ராதாகிருஷ்ணன் (ஏஐடியுசி), ராஜா ஸ்ரீதர் (எச்எம்எஸ்), அந்திரிதாஸ் (எம்எல்எப்), சேவியர் (ஐஎன்டியுசி), கே.பாலகிருஷ்ணன் (எஸ்கேஎம்) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.