tamilnadu

ஆப்பிரிக்க மூதாட்டிக்கு சென்னையில் சாவித்துவார அறுவைசிகிச்சை

சென்னை,ஜூலை3-  சூடான் நாட்டைச் சேர்ந்த 69 வயது பெண்ணுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

மண்டைக்குள் இருந்த கட்டியால் அவதி ப்பட்டு வந்த அந்த பெண் சென்னை வட பழனி காவேரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அவருக்கு 30 ஆண்டுகளுக் ்கும் மேல் அனுபவமுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரங்கநாதன் ஜோதியின் வழிகாட்டுதலின் பேரில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விழிக் குழிக்கு மேல் ஒரு சாவியை நுழைத்தால் எப்படியிருக்குமோ அந்த அளவுக்கு நவீன மருத்துவ சாதனங்களின் (சூப்ராஆர்பிட்டல் கிரானியோடமி) உதவியோடு அந்தகட்டி மென்மையாக அகற்றப்பட்டது. பொதுவாக தலையில் ஏற்படும் கட்டியை அகற்ற முன்பு மண்டை ஓட்டை திறந்து அறுவைசிகிச்சை மேற்கொள்ளவேண்டியிருந்தது. இதனால் நோயாளியின் மண்டை ஓட்டில் பெரிய கீறல் போடவேண்டியிருக்கும். ஆனால் அறி வியல் தொழில்நுட்பத்தின வளர்ச்சியாலும் மருத்துவத்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாகவும் நவீன சாதனங்கள் உதவியோடு உடலில் மிகக் குறைந்த ஊடுருவல் வாயிலாக இத்தகைய அறுவை சிகிச்சைகள் மேறகொள்ளப் படுகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்த னர்.

கிரானியோடமி (மண்டையோடு திறப்பு) என்பது, மூளையை அணுகுவதற்காக மண்டை ஓட்டின் ஒரு பகுதி தற்காலிகமாக அகற்றப்படும் அறுவைசிகிச்சை முறை யாகும். மூளையின் சிக்கலான உடற் கூறியல் மற்றும் முக்கியமான செயல்பாடு கள் காரணமாக இத்தகைய அறுவை சிகிச்சை இயல்பாகவே அதிக சிக்கலானது என்றும் மருத்துவர்கள் கூறினர்.

;