tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

சாலை வசதி கேட்ட காட்டு நாயக்கன் சங்க செயலாளர் தாக்கப்பட்டார்

ராணிப்பேட்டை, செப். 10 - காட்டுநாயகன் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு சாலை மற்றும் கால்வாய் வசதி தொடர்ந்து கேட்ட வந்த காட்டுநாயக்கன் சங்க மாவட்ட செயலாளர் எஸ். வெங்கடேசன் திங்களன்று (செப்.10) இரவு திமுக ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தூண்டுதல் பேரில்சில குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், ஆனைமல்லூர் பகுதியில் காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கு சாலை வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி கேட்டு தொடர்ந்து பல மாதங்களாக போராட்டம் நடத்தி வந்த காட்டுநாயக்கன் மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்துள்ளனர். இந்நிலையில் திங்களன்று (செப் 8) இரவு திமுக ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மீது ஏன் புகார் மனு அளிக்கிறாய் என கேட்டு சில குண்டர்கள் காட்டுநாயக்கன் மாவட்ட செயலாளர் எஸ். வெங்கடேசன் வீட்டிற்கு சென்று அவரையும் அவருடைய மனைவி புஷ்பாவையும் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த சிபிஎம் கிளை செயலாளர் உமாவும் தாக்கியுள்ளனர்.இது தொடர்பாக சிபிஎம் மாவட்ட செயலாளர் பி ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்எம்டி சிறப்பு 

ஒரே குடும்பத்தில் 4 தற்கொலை

கிருஷ்ணகிரி, செப்.10- கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு வந்த ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த லக்‌ஷ்மண மூர்த்தி (50), மனைவி ஜோதி (40),மகள் கிர்த்திகா (20), ஜோதியின் தாயார் சாராதாம்மாள் (75) நால்வரும் புதனன்று காலை அணையின் மேலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீரில் குதித்துள்ளனர். அணையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வர்கள் இதனைப் பார்த்து  உடனடியாக தண்ணீரில் குதித்து ஜோதி, கிர்த்திகா இருவரையும் மீட்ட னர்.  லக்‌ஷ்மணமூர்த்தி, சாரா தாம்மாள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரு டன் மீட்கப்பட்ட இருவரும், இறந்த இருவர் உடல்களும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் வழக்கு பதிவு செய்யப்  பட்டு இது குறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

விண்ணப்பம் வரவேற்பு

கிருஷ்ணகிரி, செப்.10- கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரியில் இந்த கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பட்ட பாடப்பிரிவுகளில் சேர்க்கை மற்றும் நேரடி சேர்க்கை குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அறிக்கை வெளியிட்டார். அனஸ்தீசியா டெக்னீசி யன், ஆப்பரேஷன் தியேட்டர் டெக்னீஷியன்,டயாலிசிஸ் டெக் னீஷியன்,அவசர சிகிச்சை டெக்னீஷியன்,ஈசிஜி,டிரெட் மில் டெக்னீஷிய ன்,ஆர்த்தோ பேடிக் டெக்னீஷியன் ஆகிய பாடப்பிரிவுகளில், 50 இடங்கள் காலியாக உள்ளன. இது குறித்த விபரங்கள், http://gmckrishnagiri.ac.in/ என்ற வலை தளத்தி லும்,கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி அறிவிப்பு பலகையிலும் வெளியிடப்பட்டு ள்ளது.  மேலும் விபரங்க ளுக்கு 84284 21800 என்ற எண்ணை தொடர்பு கொள்ள லாம் என தெரிவித்துள்ளார்.