காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரத்ததானம் செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காஞ்சிபுரம் நகரக்குழு உறுப்பினர்களுளை பாராட்டி மருத்துவர் சான்றிதழ் வழங்கப்பட்டது. எஸ்.உதயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகர செயலாளர் கே.யுவராஜ் , தலைவர் இ. சங்கர், பொருளாளர் எம். சூரியபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.