காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தை அடுத்த பூச்சிவாக்கம் பகுதியில் பேக்கரி ஒன்றில் நடந்த அடிதடி சம்பவம் தொடர்பாக முருகன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் காவலர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட காவலரின் பெயரை இந்த வழக்கில் சேர்க்காமல் நிலுவையில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார்தாரர் முருகன் காஞ்சிபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்த நிலையில், இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, புகார் மீது ஒருமாத காலமாக நடவடிக்கை எடுக்காத காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் எஸ்.சி/எஸ்.டி. சட்டத்தின்படி கைது செய்து வரும் 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.