tamilnadu

img

கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலை

சென்னை, மார்ச் 4- கல்பாக்கத்தில் 500 மெகாவாட் அதிவேக ஈனுலையின் செயல்  பாட்டை தொடங்கி வைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக திங்களன்று மாலை 3.45 மணியளவில் சென்னை  வந்தார். பின்னர் அங்கிருந்து கல்  பாக்கம் அணுமின் நிலையத்துக்கு இந்திய விமானப்படையின் ‘எம்ஐ-17வி5’ ஹெலிகாப்டரில் பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்  றார். பிரதமருடன் மேலும் இரு  ஹெலிகாப்டர்கள் உடன் சென் றன.

பின்னர், கல்பாக்கத்தில் ‘பார திய நபிகியாவித் யுத் நிகம் லிமி டெட் நிறுவனம்’ உருவாக்கியுள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட அதி வேக ஈனுலையின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத் தார்.

கல்பாக்கம் பயணத்தைத்  தொடர்ந்து பிரதமர் மோடி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக  தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத் தில் பங்கேற்றார்.

‘வணக்கம் சென்னை’ என தமி ழில் பேச்சைத் துவங்கிய பிரதமர் மோடி திறமை, வர்த்தகம், பாரம்பரி யம் ஆகியவற்றின் மையப்புள்ளி யாக சென்னை திகழ்கிறது; எனக் கும் தமிழ்நாட்டுக்குமான உறவு மிக வும் பழமையானது; சென்னை வரும்போதெல்லாம் உற்சாகம் அடைகிறேன். தமிழ்நாட்டில் பாஜக வுக்கு ஆதரவு பெருகுவதால் சிலர்  அச்சம் அடைகின்றனர். சென்னை யில் வளர்ச்சி திட்டங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செல விடப்படுகிறது. சென்னையில் மெட்ரோ, விமான நிலையங்கள் என பல்வேறு வளர்ச்சி திட்டங் களை முன்னெடுத்து வருகிறோம்” என்று வழக்கம்போல கதைகளை அள்ளி விட்டார். தமிழக வெள்ள நிவாரணத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்காத பிரதமர் மோடி அதனை மறைத்து விட்டு, “நெருக்கடியான காலக்கட்டத்தில், திமுகவினர் வெள்ள மேலாண்மைக்கு பதி லாக விளம்பரம் செய்வதில் மும்முர மாக இருந்தனர்” என பழிபோட்டார். “இந்த நாடுதான் எனது குடும்பம். 140 கோடி மக்களே எனது குடும்  பம்” என்றும் உருக்கம் காட்டினார்.

ஆபத்தான தொழில்நுட்பம்?

கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு  சுற்றுச்சூழல் அமைப்புக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இத்திட்டத்  தின் ஆபத்து குறித்து விரிவான அறிக்கைகளையும் வெளியிட்டி ருந்தது.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈனுலை  தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது, அதிக பொருளா தாரச் சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அதை விட்டுவிட்டன. இந்த வகை உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால், ஜப்பானில்  மாஞ்சூ ஈனுலையில் தீ விபத்து ஏற்பட்டு அந்த உலை மூடப் பட்டது. பிரான்சில் செயல்பட்டு வந்த சூப்பர்பீனிக்ஸ் ஈனுலையும் அதிக பொருளாதாரச் சுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை, பொது மக்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டது.

இவ்வாறு உலக நாடுகள் பலவும் பயன்படுத்தி கைகூடாத கார ணத்தால் கைவிடப்பட்ட தொழில்நுட்பத்தை பிரதமர் மோடி துவக்கி  வைத்திருப்பதாகவும், இதன்மூலம், தமிழகத்தை அணுக் கழிவு களின் குப்பைத் தொட்டியாக மாற்ற முயற்சிப்பதாகவும், தமிழர்களை  சோதனை எலிகளாக மாற்றும் சூழ்ச்சி அடங்கியிருப்பதாகவும் எதிர்ப்புக்கள் எழுந்திருந்தன.

ஆனால், இந்த எதிர்ப்புக்களை அனைத்தையும் மீறி, அதிவேக  ஈனுலைகளை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.