200 கல்லூரிகளில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்
கள்ளக்குறிச்சி, செப். 3 - தமிழ்நாட்டில் பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் 50க்கும் மேற்பட்ட ஆளு மைகளைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி 200 கல்லூரிகளில் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் தனி யார் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், தமிழ்நாடு முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு (ஓய்வு) ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ் மரபு மற்றும் பண்பாடு குறித்து கல்லூரி மாண வர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர், “ தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினரிடையே குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரை திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் மாபெரும் தமிழ்க் கனவு பரப்புரைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது”என்றார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழர் மரபும், நாகரிகமும், உயர்தனிச் செம்மொழியான தமிழின் சிறப்பு கள் இலக்கிய செழுமை, தமிழின் தொன்மை, சமூக சமத்துவம், சமூக நல்லி ணக்கம், மகளிர் மேம்பாடு, தொல்லியல் ஆய்வு கள், தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாளர்களை கொண்டு மாபெரும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியினை கல்லூரி மாணவ, மாணவியர் உரிய முறையில் பெற்று சிறப்பு வாய்ந்த தமிழின் தொன்மையினை அறிந்து பயன்பெற வேண்டும் எனவும் கூறனிர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தர்மராஜா, துறை சார்ந்த அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.