tamilnadu

img

டி.எம் கிருஷ்ணா புத்தக வெளியீட்டிற்கு அனுமதி மறுப்பு சர்ச்சையில் கலாஷேத்ரா

கர்நாடக  பாடகர் டி.எம் கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டுக்கு  வழங்கிய அனுமதியை கலாஷேத்ரா நிறுவனம்  ச ரத்து செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
சென்னையைச் சேர்ந்தவர் பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா. இவர் எழுதிய செபாஸ்டியன் அண்டு சன்ஸ் ( Sebastian and Sons ) என்ற புத்தகத்தை வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் வெளியிட இருந்தது. இதற்கான வெளியீட்டு நிகழ்வு பிப்ரவரி 2-ஆம் தேதி சென்னை பெசண்ட் நகரில் அமைந்துள்ள கலாஷேத்ரா வளாகத்தில் நடைபெறுவதாக இருந்தது.   
இந்நிலையில்  புத்தக வெளியீட்டுக்கு முன்பு வழங்கிய அனுமதியை கலாஷேக்த்ரா ரத்து செய்வதாக கடிதம் அளித்துள்ளது. டி.எம்.கிருஷ்ணாவின் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இருப்பதாக தெரிய வருவதால் அனுமதி வழங்க இயலாது என்று கலாஷேத்ரா அளித்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தென்னிந்தியாவில் மிருதங்கம் தயாரிப்புத் தொழிலில் இருக்கும் தொழிலாளர்களின் சிரமத்தை எனது புத்தகத்தில் கூறியுள்ளேன், பட்டியல் இன மக்கள் 7 தலைமுறைகளாக மிருதங்கம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எந்த தோலை பயன்படுத்தினால் எப்படி தாளம் வரும் என்பதை அறிந்து மிருதங்கத்தை செய்கின்றனர். இதுகுறித்துதான் என் நூலில் குறிப்பிட்டுள்ளேன். திட்டமிட்டபடி பிப்.2ஆம் தேதி கலாஷேத்ராவுக்கு பதில்  சென்னை தரமணியில் உள்ள ஆசியன் ஊடகவியல் கல்லூரியில்  மாலை  6.45 மணிக்கு புத்தக வெளியீடு நடக்கும் என்றும் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 
 

;