tamilnadu

img

விண்ணப்பங்கள் வரவேற்பு

விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம், செப்.18- தாட்கோ மூலம் கடன் பெற, இ-சேவை மூலமாக விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். தாட்கோ மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சரின் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தொழில் முனைவுத் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் மற்றும் PM AJAY போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் தங்கள் இணையதளம் மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர்.  இதை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக அந்தந்த பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அவர்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் CM.ARISE, PM.AJAY மற்றும் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தில் மனு செய்யலாம். என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்தார்.