tamilnadu

img

க.பீம்ராவ் தாயார் காலமானார்....

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவின் தாயார் அன்னம்மாள் கணேசன் திங்களன்று (நவ.16) காலமானார். அவருக்கு வயது 89.

அன்னம்மாளின் கணவர் எம்.பி.கணேசன் நங்கநல்லூர் ஊராட்சிமன்ற தலைவராக இருந்தவர். அவருக்கு 2 மகள்கள், 4 மகன்கள்உள்ளனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக எண்.23/15, முதல்தெரு, என்ஜிஒ காலனி, நங்கநல்லூர், சென்னை-144 என்ற முகவரியில்  வைக்கப்பட்டுள்ளது.அன்னாரது உடலுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.கல்யாணசுந்தரம், ஆர்.வேல்முருகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், ஆலந்தூர் பகுதிச் செயலாளர் எஸ்.அரிகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஜெயசங்கரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எம்.பழனி, தமிழ்நாடுசிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில், அதிமுக வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் ராஜா, பரங்கிமலை ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்ளிட்டு பல்வேறு கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.