tamilnadu

img

ஜூலை 9 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

ஜூலை 9 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து ஜூலை 9 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதனையொட்டி வியாழனன்று (ஜூலை 3) சிந்தாதிரிப்பேட்டையில் மத்திய சென்னை மாவட்ட மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் வி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், எம்ப்ளாயீஸ் பெடரேசன் பொதுச் செயலாளர் என்.பழனி, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் மாநில பொதுச் செயலாளர் எம்.சுப்பிரமணி, மின்சார தொழிற்சங்க சம்மேளனம் பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி, தொழிற்சங்க சம்மேளனம் திட்ட செயலாளர் எம்.தனசேகரன், ஐக்கிய சங்கம் திட்ட செயலாளர் ஜி.வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர்.