புதுச்சேரியில் புதிய அமைச்சராக ஜான்குமார் பதவியேற்றார்
புதுச்சேரி, ஜூலை 14- புதுச்சேரியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் புதிய அமைச் சராக பதவியேற்றார். புதுச்சேரி அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த பாஜகவைச் சேர்ந்த சாய் ஜெ சரவணன் குமார் சில வாரங்களுக்கு முன்பு தனது அமைச்சர் பதவியை ராஜி னாமா செய்ததைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜான் குமார் திங்கள் கிழமை அமைச் சராக பொறுப்பேற்று கொண்டார். புதுச்சேரி ராஜ்நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் துணைநிலை ஆளுநர் டாக்டர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு ஜான்குமாருக்கு பதவிப்பிர மாணம் செய்து வைத்தார். விழா வில் முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், திருமுருகன், தலைமைச் செயலாளர் சரத் சவுகான் மற்றும் அரசு செயலர்கள், உயர் அதிகாரி கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காமாட்சி அம்மன் கோவில் நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிமிப்பித் துள்ளதாக ஜான்குமார்மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது. பாஜக நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்பு சட்டப்பேரவையில் நடை பெற்ற நியமன உறுப்பி னர்கள் பதவி ஏற்பு விழா வில் பாஜகவை சேர்ந்த மூன்று நியமன உறுப்பி னர்களான தீப்பாய்ந்தான், செல்வம், ராஜசேகர் ஆகி யோருக்கு பேரவை தலைவர் செல்வம் பதவி பிர மாணம் செய்து வைத்தார். ஏற்கெனவே, முதல்வர் நாராயணசாமி தலைமை யிலான ஆட்சியில் காங்கிரஸ் கட்சியின் உசுடு தொகுதி எம்ஏல்ஏவாக இருந்தவர் தீப்பாய்ந்தான். நாராயணசாமி தலைமை யிலான ஆட்சி கவிழ்ப்புக்கு முக்கிய காரணமாக விளங்கியவர். இந்து முன்ன ணியைச் சேர்ந்த செல்வம் மீது புதுச்சேரி மாதா கோவில் வீதியில் உள்ள கிறிஸ்தவ வழி பாட்டு தளத்தில் இந்துக்களின் ஈஸ்வரன் சிலை உள்ளது என்று கூறி அமைதியை சீர்குலைத்தவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. காரைக்கால் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தொழிலதிபர் ஆவார்.