tamilnadu

img

பழைய சாதம் சாப்பிடுவது நல்லது

சென்னை, மார்ச் 6- அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில்  புனரமைக்கப்பட்ட அவசர சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை அரங்கங்களை அமைச்சர் மா.சுப்பிமைணியன் புதனன்று( மார்ச் 6) திறந்து வைத்து, உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள், அவசர ஊர்தி வாகனங்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர் களிடம் கூறுகையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வரலாற் றில் செவ்வாயன்று (மார்ச் 5) மட்டும் 160க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது.  

இனி வரும் காலங்களில் தினசரி  200 அறுவை சிகிச்சை வரை நடை பெறும். மேலும் குடல் அழற்சி ஏற்படு வதற்கு பழைய சாதம் மிக அற்புதமான தீர்வாக உள்ளது என்ற தகவலையும் இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் கண்டறிந்து தெளிவு படுத்தியுள்ளனர். நானும் வாரத்திற்கு இரண்டு முறை பழைய சாதத்தை உட்கொண்டு வருகிறேன் என்றார். இதில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராய புரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, ஸ்டான்லி மருத்துவ மனை முதல்வர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.