இஸ்ரேல் அமைச்சர் வருகைக்கு கண்டனம்
இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தலைமையில் இந்தியாவிற்கு வரும் குழுவினரை திரும்பி போக வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் ஆர்.கே. நகர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட துணைத் தலைவர் நவீன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் மோகன கிருஷ்ணன், துணைச் செயலாளர் குணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.