tamilnadu

img

தொழில் நுட்ப கதிர்

வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை தேட புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ்அப்பில் தேதியை வைத்து பழைய மெசேஜ்களை தேடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. சமீபத்தில் ஸ்பேம் மெசேஜ்களை லாக் ஸ்கீரினில் இருந்து பிளாக் செய்யும் வசதி, போலி தகவல்களை தடுத்து நிறுத்த ஹெல்ப்லைன் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப்பில் தேதியை வைத்து பழைய மெசேஜ்களை தேடும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் பழைய மெசேஜ்களில் உள்ள டெக்ஸ்ட் (Text), படங்கள் (Photos), ஆடியோ (Audio) மற்றும் வீடியோக்களை (Video) கண்டெடுக்க முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பயனர்கள் வாட்ஸ்அப்பில் தேதியை வைத்து மெசேஜ்களை தேடுவதற்கு, முதலில் ஒரு குறிப்பிட்ட சாட் அல்லது வாட்ஸ்அப் குரூப்பை தேர்வு செய்ய வேண்டும். அதில் ‘name’ பகுதியை கிளிக் செய்தால், ‘Search’ என்ற ஆப்ஷன் காண்பிக்கும். அதனைத் தேர்வு செய்த பின்னர், அதில் காண்பிக்கும் காலண்டர் குறியீட்டை கிளிக் செய்து அதில் தேதியை குறிப்பிட்டால், அந்த தேதியில் வந்த மெசேஜ்களை கண்டெடுக்க முடியும். 

பயனர் விவரங்களை ஏஐ நிறுவனத்துக்கு விற்க வேர்ட்பிரஸ், டம்ப்ளர் முடிவு?
வேர்ட்பிரஸ் (Wordpress) மற்றும் டம்ப்ளர் (Tumblr) பயனர்கள் விவரங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

செயற்கை நுண்ணறிவு தளங்கள் இயங்குவதற்கு பெரும் அளவிலான தரவுகள் தேவைப்படுகின்றது. இணையத்தில் வெளியாகும் தரவுகளை வைத்து ஏ.ஐ நிறுவனங்கள் சாட்பாட்களை வடிவமைத்து வருகின்றன. படைப்பாளிகள் மற்றும் பதிப்பகங்கள் தங்களது படைப்புகளை தங்களுக்கே தெரிவிக்காமல் இந்நிறுவனங்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகளும் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், வேர்ட் பிரஸ் மற்றும் டம்ப்ளர் நிறுவனங்களின் தாய் நிறுவனமான ‘ஆட்டோமேட்டிக்’ (Automattic), தங்களது பயனர்கள் விவரங்களை டெஸ்டிங் (Testing) பணிகளை மேற்கொள்வதற்காக ஓபன் ஏஐ (OpenAI) மற்றும் மிட்ஜெர்னி (Midjourney) போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக ‘404 மீடியா’ தகவல் தெரிவித்துள்ளது.

ஏஐ நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு தங்களது தரவுகளை பகிர விரும்பாத பயனர்கள் அதனை தவிர்ப்பதற்காக புதிய அம்சம் ஒன்றை கொண்டு வர உள்ளதாகவும் ஆட்டோமேட்டிக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூகுள் மேப்ஸில் ‘கிளான்சபுள் டைரக்ஷன்ஸ்’ வசதி அறிமுகம்!
கூகுள் மேப்ஸ் செயலியில் ‘கிளான்சபுள் டைரக்ஷன்ஸ்’ (Glanceable Directions) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ் செயலியில் ஒவ்வொரு முறையும் அன்லாக் (unlock) செய்துதான் வழிகளைப் பார்க்கும் நிலை இருந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கூகுள் மேப்ஸில் ‘கிளான்சபுள் டைரக்ஷன்ஸ்’ வசதி குறித்த அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டது. தற்போது இந்த கிளான்சபுள் டைரக்ஷன்ஸ் வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போனை அன்லாக்  செய்யாமலே கூகுள் மேப்ஸை பயன்படுத்த முடியும். 

இந்த அம்சத்தை பயன்படுத்த சில செட்டிங்க்ஸ்-ஐ மேற்கொள்ள வேண்டும். கூகுள் மேப்ஸ் செயலியில் உள்ள Profile icon-ஐ கிளிக் செய்து அங்குள்ள செட்டிங்க்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து  ‘Navigation Settings’ கொடுக்கவும். அதில் ‘Glanceable directions while navigating’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.