tamilnadu

img

சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

2021-ஆம் ஆண்டில் வெளியான உலகின் சிறந்த 10 ‘சண்டைக்காட்சி மற்றும் சாகசங்கள் திரைப்படங்கள் பட்டியலில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை, திரைப்படம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. 1970களின் காலக்கட்டத்தில் மெட்ராஸில் தழைத்தோங்கிய குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சார்பட்டா திரைப்படத்தில் நடிகர் பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், கலையரசன் ஆகியோர் நடித்திருந்தனர். சார்பட்டா பரம்பரை படத்திற்கு முரளி ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற கபிலன், டான்சிங் ரோஸ், வேம்புலி, மாரியம்மா, லெட்சுமி, ரங்கன் வாத்தியார், கெவின் டாடி உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில் 2021-ஆம் ஆண்டில் வெளியான உலகின் சிறந்த 10 சண்டைக்காட்சி திரைப்படங்கள் பட்டியலில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் 3-வது இடத்தை பிடித்துள்ளது

இது தொடர்பாக நியூசிலாந்தைச் சேர்ந்த லெட்டர்பாக்ஸ்ட் இணையதளம் வெளியிட்டுள்ள 2021-ஆம் ஆண்டில் வெளியான ஆக்‌ஷன் மற்றும் அட்வென்சர் கதைக்களத்தைக் கொண்ட உலகின் சிறந்த பத்து திரைப்படங்களின் பட்டியலில் டாம் ஹாலண்ட் நடிப்பில் வெளியாகிய ஸ்பைடர் மேன், நோ வே ஹோம், திரைப்படம் முதல் இடத்தையும் டெனிஸ் வில்லெனுவின் சைன்ஸ் பிக்சன் படமான டியூன் 2 -ஆவது இடத்தையும், இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் சர்வதேச அளவில் 3 -ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. மின்னல் முரளி 9 -ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.