tamilnadu

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை

சென்னை, ஏப்.26-அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சி அளிக்கும் போது தாங்கள் கூறும் தரவுகள் தவறாக புரிந்துகொள்ளப்படுவதாகவும், மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து, அந்த குழுவின் முன்னிலையில் தங்களிடம் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிடுமாறும் கோரி அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அப்பல்லோ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவர் குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் கோரப்பட்டது.அதனை ஏற்று ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். மேலும், அப்பல்லோவின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

;