tamilnadu

img

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க இடைக்கால நிர்வாகக்குழு செயல்பட தடை

மதுரை:
தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இடைக்கால நிர்வாகக்குழு செயல்பட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை பிறப்பித்துஉத்தரவிட்டுள்ளது.  தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அம்மாவாசை  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல்செய்திருந்தார், அதில் “நான் பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக உள்ளேன். கடந்த 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் 19- ஆம் தேதி மதுரை ஆவின் சார்பாகதேர்தல் நடத்த அறிவிப்பானை வெளியிடப்பட்டு 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களிலிருந்து தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்த நிலையில் கடந்த ஆக.22- ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்து தேனிமாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுசங்கம் பிரிக்கப்பட்டு தனியாக ஆரம்பிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட சங்கத்தில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் 13 உறுப்பினர்கள் தேர்தல் மூலம்தேர்தெடுக்கப்படவேண்டிய நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி தேனி மாவட்டபால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கதில் 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செப்டம்பர் 2- ஆம் தேதி  பதவியேற்றனர்.

தற்போது தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ஓ.ராஜா உள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணைத் தலைவர், உறுப்பினர்கள் பலர் அதிமுகவைச்  சேர்ந்தவர்கள். எனவே தேனிமாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுசங்கத்தில் தற்காலிகமாக  நியமிக்கப்பட்டுள்ள 17 உறுப்பினர்கள் செயல்பட தடைவிதிக்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு வியாழனன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், 17 உறுப்பினர்கள் நியமனம் தற்காலிகமானது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் தேனி மாவட்ட பால்உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இடைக்கால நிர்வாகக்குழு, 17 உறுப்பினர்கள் செயல்பட இடைக்காலத் தடை விதித்தும். மனு குறித்து பால் உற்பத்தி மற்றும்பால்வள மேம்பாட்டுத்துறை பதிவாளர்,ஓ.ராஜா உட்பட அனைத்து உறுப்பினர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோ பர் 17- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.