tamilnadu

img

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்

திருவள்ளூர் ஏப்-29 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரிரவிக்குமார் திங்களன்று (ஏப்.29) வெளியிட்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 முதல் 29ஆம்தேதி வரை நடைபெற்றன. இத்தேர்வில் திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில்(பொன்னேரி, திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி, திருத்தணி ஆகிய ஐந்து கல்வி மாவட்டங்கள் உட்பட) மொத்தமுள்ள 631பள்ளிகளில் 24,101 மாணவர்களும், 23,426 மாணவிகளும், மொத்தம் 47,527 தேர்வர்கள் தேர்வு எழுதினர். இதில் 21,731 மாணவர்களும், 22,426 மாணவிகளும் ஆக மொத்தம் 44,157 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.91 விழுக்காடாகும். வருவாய் மாவட்ட அளவில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.31 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விழுக்காடு 91.60 சதவீதம் ஆகும். வருவாய் மாவட்ட அளவில் 38 அரசுப்பள்ளிகள் உட்பட மொத்தமாக 247 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்றுள்ளன. மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம் ஒரு இடம் முன்னேற்றம் பெற்று தற்போது 27ஆம் இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

;