tamilnadu

img

சென்னையை விட குரோம்பேட்டையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு

சென்னை ,மே 30 சென்னையின் புறநகர் பகுதியாக இருக்கும் குரோம்பேட்டை தற்போது நகரின் முக்கிய இடமாக மாறிவிட்டது. பல  முக்கியமான வர்த்தகநிறுவனங்கள் இங்குகிளைகளை தொடங்கியிருப்பதால்  போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. ஒரு வாரத்திற்கு சுமார் 10லட்சம் பேர் இந்த பகுதிக்கு  வருகை தருகிறார்கள். வாரஇறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கிறது. ஒரு சமீபத்திய ஆய்வறிக்கை படி சென்னையின் முக்கிய வர்த்தக இடங்களில் ஒன்றாக குரோம்பேட்டை உள்ளதாக தெரிவிக்கிறது. ஷாப்பிங் மையங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற அத்தியாவசிய வர்த்தக மையங்கள் காரணமாக, இந்தப்பகுதி காலை மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை சந்திக்கிறது. குரோம்பேட்டையில் தற்போது அனைத்து வணிகப் பிரிவுகளின் சில பெரிய பிராண்டுகளின் கடைகள் உள்ளன.  ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், பாண்டலூன்ஸ், சென்னை சில்க்ஸ், சேகர் எம்போரியம் போன்றவை உள்ளன, மற்றும்  சிறீகுமரன் தங்க மாளிகை, ஜி.ஆர். டி ஜூவல்லர்ஸ், லலிதா ஜூவல்லர்ஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்ற நகைக் கடைகள் உள்ளன. பொது மருத்துவமனை, தீபம் மருத்துவமனை, பார்வதி மருத்துவமனை, பாலாஜி மருத்துவமனை,  போன்ற பலமருத்துவமனை உள்ளன,ஆசிஃப் பிரியாணி, புஹரி ஹோட்டல, அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், திண்டுக்கல் தலப்பாகட்டி உணவகம் போன்ற ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் இங்குள்ளன. இதனால்  தி நகரைப்போன்று குரோம்பேட்டையும் ஒரு சிறந்த வர்த்தக நிலையமாக மாறி வருகிறது. இதனால்சென்னையில் மற்ற பகுதிகளை விட  குரோம்பேட்டையில் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தஇடத்தை வணிகத் திட்டங்கள் மற்றும் பெரியவர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தக மையங்களை புதிதாக அமைக்கவும் கிளைகளை தொடங்கவும் குறிவைக்கின்றன.விரைவில் சென்னை நகரின் அடுத்த வணிக மையமாக தி நகரை முந்திவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஆனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் மக்களும் வழக்கமாக இந்தபகுதி வழியாக செல்லும் பொதுமக்களும் பெரும்சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மெட்ரோரயில் சேவையை ஜிஎஸ்டிசாலையில் குரோம்பேட்டை,தாம்பரம், வண்டலூர் வழியாக செங்கல்பட்டு வரை நீட்டிக்கவேண்டும். மேலும் சாலைகளில் அங்காங்கே பொதுமக்கள் சிரமமின்றி கடக்க போக்குவரத்து காவலர்களை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;