tamilnadu

img

நூறுநாள் வேலை பணிதள பொறுப்பாளர்களாக ஆளுங்கட்சியினரை நியமிக்க வேண்டும் அதிமுகவினர் அடாவடி

மதுராந்தகம், ஜூன் 4 - நூறுநாள் வேலைத் திட்டத்  தில் அதிமுக கிளை செயலாளர் களை மட்டுமே பணிதள பொறுப்பா ளர்களாக நியமிக்க வேண்டும் என அடவடி செய்து வருகின்றனர். இத னைக் கண்டித்து வையாவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், மது ராந்தகம் வட்டம், வையாவூர் ஊராட்சி யில் 6 கிராமங்கள் உள்ளன. இக்கிரா மங்களில் நூறுநாள் வேலைத்திட் டத்தின் கீழ் பணிதள பொறுப்பாளர் கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடை பெற்று வருகின்றது. இந்நிலையில் அதிமுக ஒன்றியச் செயலாளர் அப்பாத்துரை, அவைத்தலைவர்; பெரியத்தம்பி ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலர்களைத் தொடர்பு கொண்டு அதிமுக கிளை செயலாளர்  களை மட்டுமே பணிதள பொறுப்பா ளர்களாக நியமிக்க வேண்டும். தற்போது பணியில் உள்ள அனை வரையும் நீக்கிவிட்டு உடனடியாக அவர்களிடம் உள்ள பணி வருகை பதிவேடுகளைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

மேலும், வையாகூர் ஊராட்சியில் பணிதள பொறுப்பாளர்களில் ஒருவ ரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். ராஜா உள்ளிட்ட 7 பேரை அப்பணி யிலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அதிமுக-வினரை  கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சித் தலை மையில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த னர். கிராமத்தில் உள்ள அனைவ ருக்கும் வேலை வழங்க வேண்டும், தற்போது பணியில் உள்ள பணிதள பொறுப்பாளர்களை நீக்க கூடாது என  வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி னர். மார்க்சிஸ்ட் கட்சியின் மதுராந்த கம் வட்டச் செயலாளார் கே.வாசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.மோகன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ராஜா, மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கலையரசி ஆகியோர் பேசினர். இதன் பின்னர் ஊராட்சி செயலரிடம் மனு அளிக்கப்பட்டது.