tamilnadu

img

சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை

சென்னை ஐஐடியில் 4-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உள்ள கல்வி நிலையங்களில், சிறந்த கல்வி நிலையமாக ஐஐடி திகழ்கிறது. ஐஐடியில் படித்தால், வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை, அதிக சம்பளம் போன்ற காரணங்களுக்காக அங்கு படிக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விரும்புகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றது. ஒரு பக்கம், கல்வி செயல்திறன் காரணமாக மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகவும், மற்றொரு பக்கம் சாதி ரீதியான பாகுபாடு பார்க்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னை ஐஐடியில் 4-ஆம் ஆண்டு ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் (21 வயது) சுப்ரான்சு சேகர் டெஹுரி தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவரின் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

;