“இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் அதுதான் இந்தியாவின் கடைசித் தேர்தல். இதற்குபின் தேர்தலே வராது. எனவே, வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜகவை கட்டாயம் தோற்கடிக்க வேண்டும். இனியும் ராமர் பெயரை சொல்லி வெற்றிபெற முடியாது என்பதால், வாக்காக மாற்றுவதற்கு என்ன செய்யலாம்? ‘இந்தியா’ கூட்டணியை உடைப்பது எப்படி? என்று திட்டம் போட்டு அரங்கேற்றி வருகிறார்கள்” என அதிமுக முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா விமர்சித்துள்ளார்.