tamilnadu

img

கருப்புக்கொடி போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

சென்னை:
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும் புதிய சட்டங்களை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும்  போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின்  தலைவர் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை:கொரோனா தொற்றல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை சாதகமாக பயன்படுத்தி ஏழை எளிய நாட்டு மக்களுக்கும்  விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டுவர முயல்கிறது.மின்சார திருத்த சட்டம் , அத்தியாவசிய  பொருட்கள் திருத்த சட்டம்,     வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய மக்கள் விரோத, சட்டைகளை மத் திய அரசு இயற்ற நடவடிக்கை எடுத்து வருவதை மனிதநேய மக்கள் கட்சிசார்பில் கண்டிக்கிறேன்.

இந்த சட்டங்களை எதிர்த்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு ஜூலை 27 அன்று நடத்த உள்ள வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி  ஆதரவு அளித்து மனிதநேய மக்கள் கட்சியினரின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இந்த மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பை வெளிப் படுத்துவர்.இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

;