சேலம், ஜூலை 27- விவசாயிகளுக்கு எதிரான சட் டங்கள் மற்றும் விளைநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகி யவற்றை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கி ணைப்புக் குழு சார்பில் விவசாயிகள் வீடுகளில் கருப்புகொடியேற்றி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் மற்றும் விவசாயிக ளின் நலனுக்கு எதிரான மின்சார திருத்தச் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைப்பொருட்கள் வணிக ஊக்கு விப்பு அவசரச் சட்டம் 2020 மற்றும் விவசாயிகளுக்கான விலை உத்தரவா தம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயி கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு வின் அறைகூவலுக்கு ஏற்ப திங்க ளன்று விவசாயிகள் தங்களது வீடுக ளில் கருப்புக்கொடியேற்றி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் மேச்சேரி, கெங்கவல்லி, ஆத்தூர், பெத்தநாயக் கன்பாளையம், வாழப்பாடி, பனமரத் துப்பட்டி, ஓமலூர், சேலம் மேட்டூர், நங்கவள்ளி, கொங்கணாபுரம், சங்க கிரி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பகு தியில் நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எ.ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், துணைத் தலைவர்கள் பி.தங்கவேலு, பி.அரியாக்கவுண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னர்.
தருமபுரி
தருமபுரி தொலைபேசி அலுவல கம் மற்றும் நல்லம்பள்ளி வட்டாட் சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.என்.மல்லை யன், மாவட்ட செயலாளர் சோ.அருச்சு ணன், மாநில செயலாளர் பி.டில்லி பாபு, விசிக விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநில துணைத்தலைவர் கிள்ளிவளவன், சிபிஐ (எம்எல்) விவசா யிகள் சங்கத் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் விவ சாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் மதுசூதனன், மாவட்டச் செயலாளர் குமார், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ் உட்பட தோழமைக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவை
கோவையில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி்.பி.இளங்கோ வன், செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, பொருளாளர் தங்வேல், காளப்பண், விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, கூடலூர், எருமாடு உள ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என். வாசு, செயலாளர் ஏ.யோகண் ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.அடையாளகுட்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செய லாளர் சகாதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.