tamilnadu

img

ஓய்வூதிய நிலுவை கேட்டு பெருந்திரள் முறையீடு

சென்னை, ஜூலை 10 - ஓய்வூதிய நிலுவைகளை வழங்க வலியுறுத்தி புதனன்று (ஜூலை 10) சென்னையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஓய்வூ தியர்கள் பெருந்திரள் முறையீடு போராட் டம் நடத்தினர்.  அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில்  6 ஆயிரத்து 800 ஓய்வூதியர்கள் உள்ளனர். 800 பேர் பணியின் போதும், 713 பேர் ஓய்வு  காலத்திலும் என ஆயிரத்து 613 பேர் இறந்  துள்ளனர். இவ்வாறாக ஓய்வூதியர், விதவை  ஓய்வூதியர், விருப்ப ஓய்வு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களில் 600 பேருக்கு 2003 முதல் உள்ள ஓய்வூதிய நிலுவையை வழங்க வேண்டும். நீதிமன்ற வழக்கு போன்ற காரணங்க ளால் குடும்ப ஓய்வூதியம், விதவை ஓய்வூ தியம், விருப்பு ஓய்வு ஓய்வூதியம் போன்  றவை பலருக்கு வழங்கப்படாமல் உள்ளதை  விரைந்து வழங்க வேண்டும். பொறியியல் கல்லூரி நிதி, மருத்துவக் கல்லூரி நிதி, பல்வகை தொழில் நுட்பக் கல்லூரி நிதி,  ஐஆர்டி நிதி பிடித்தம் செய்ததை திரும்ப வழங்க வேண்டும். 2018 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஓய்வு பெற்ற 700 பேருக்கு கொடுக்கா மல் உள்ள பணிக் கொடை, விடுப்பு சம்பளம்,  ஒப்படைப்பு தொகையை வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்கும் ஆணை வெளியிடு வதில் உள்ள இடர்பாட்டை நீக்க வேண் டும், 2010 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஓய்வு பெற்றோரின் குடும்ப வாரிசுக்கு 15 விழுக்  காடு ஒப்பந்த உயர்வை அமல்படுத்த வேண்டும், தொடர் பணியுடன் நீதிமன்ற  தீர்ப்பு பெற்று ஓய்வு பெற்றவர்க ளுக்கும், நிர்வாகம் செய்த நீதிமன்ற  மேல்முறையீட்டால் ஓய்வு பெற்றவர்க ளுக்கும் ஓய்வூதியம் தர வேண்டும். ஓய்வூதியத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க  வேண்டும், ஒப்பந்த உயர்வுகளை அமல்ப டுத்தி நிலுவைகளை வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை செயல்ப டுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள விரைவு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு இந்த பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக  ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் விரைவு போக்குவரத்துக் கழக மாநில மையம் சார்பில்  நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராள மானோர் கலந்து கொண்டனர். போராட் டத்திற்கு மாநில துணைத் தலைவர் என். மகா லிங்கம் தலைமை தாங்கினார். நல அமைப்  பின் பொதுச் செயலாளர் கே. கர்சன், விரைவு  போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் சங்கத் தலைவர் ஏ. ரைமண்ட், நிர்வாகிகள் எம்.  சண்முகம், பி.வி. வெங்கடாச்சலம், பால்ராஜ்,  பி. சுரேந்திரன், சி.பி. வாசன், ஞானசேகரன், கணபதி, ரவி, வி.பி. ராமமூர்த்தி, எஸ். வேணு கோபால் உள்ளிட்டோர் பேசினர்.

;