tamilnadu

img

அரசு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு

தூத்துக்குடி, அக்.12- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிர மணியன் உள்ளிட்ட ஐந்து பேரின் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கோவை மாவட்டத் தலைவர் செந்தில்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மூன்று துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரின் மாறுதல்களை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட கோ ரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செந்தூர்ரா ஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தே.முருகன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். டிஎன்ஆர்டிஓஏ மாவட்டத் தலைவர் மகேந்திர பாபு டிஎன்எஸ்ஓயூ மாவட்டத் தலைவர் அண்ணாமலை பரமசிவம், அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் தங்கவேல், தமிழ்நாடு அரசு மின்துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செய லாளர் மகாராஜன், டிஏஎல்ஏ மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், டிஎன்ஹச்ஆர்ஐஏ மாவட்டச் செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கி னார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் என் வெங்கடேசன் நிறைவுரை ஆற்றினார். மாவட்டப் பொருளாளர் தமிழரசன் நன்றி யுரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மாநில மையத்தின் அரைகூவலுக்கிணங்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.