மழையால் வீடு இடிந்து சேதம்
சென்னை, அக்.22- திருவொற்றியூர் குப்பம் பகுதியில் வசிப்பவர் தேசராணி. இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய பேரன் தட்சிணாமூர்த்தி. இருவரும் ஒன்றாக ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர். புதன்கிழமை அதிகாலை பெய்த தொடர் கனமழை காரணமாக ஓட்டு வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில் மூதாட்டி அவருடைய பேரன் லேசான காயத்து டன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதில் வீட்டில் இருந்த கேஸ் ஸ்டவ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல பொருட்கள் சேதமடைந்தன. அரசு வீட்டை சீரமைத்து கொடுக்க வேண்டும் என தேசராணி கோரிக்கை விடுத்தார்.
