தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு டிஜிபி இருந்த சங்கர் ஜிவால், ஓய்வு பெறும் நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக இருக்கும் வெங்கடராமனுக்கு, கூடுதல் பொறுப்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பணியும் வழங்கப்பட்டுள்ளது.
வெங்கடராமன், சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பொறுப்பை இன்று மாலை 3.30 மணியளவில் ஏற்றுக் கொள்கிறார். அவரிடம் ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.