இசையமைப்பாளர் இளையராஜா மலேசியாவில் சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் வரும் 14 ஆம் தேதி அங்கு வாழும் தமிழ்மக்களுக்காக மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். ஒரு இசைக்குழு மற்றும் பின்னணி பாடகர்களின் ஆதரவுடன், நடைபெற உள்ள இந்த இசை நிகழ்ச்சியில் கடந்த 50 ஆண்டுகால பாடல்களை இக்குழு வினரோடு இணைந்து இளையராஜாவும் பாட உள்ளார் என்று சென்னையில் இதற்கான போஸ்டரை வெளியிட்டு பேசிய மலேசியா துணைத் தூதர அதிகாரி சரவணன் காரதிஹயன் கூறினார். மலேசிய சுற்றுலா நிறுவனத்தின் மோஜோ திட்டங்களின் தலைமை நிர்வாக அதிகாரி ரத்னா கே நடராஜன், இயக்குனர் ரசாய்தி அப்துல் ரஹீம், மலிண்டோ விமான நிறுவனத்தின் தெற்காசிய தலைவர் சுரேஷ் வனன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.