சென்னை, மார்ச் 4- அய்யா வைகுண் டர், ராபர்ட் கால்டுவெல் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி முன்வைத்துள்ள அவதூறு கருத்துக்கள் கண்டனத்திற்கு உரி யவை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“கால்டுவெல்லின் வருகை கிறித்தவ மதப் பரப்புப் பணியை அடிப்படையாகக் கொண் டது தான். எனினும், கால்டுவெல் தமிழகத்தில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம், சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டதால், தமிழரின் வர லாற்றோடு ஒன்று கலந்து இருக்கிறார். வழக் கிழந்து போன வடமொழியை புறந்தள்ளிய ராபர்ட் கால்டுவெல் குறித்து, சனாதன கும்பல் தொடர்ந்து பரப்பி வரும் அவதூறுகளை ஆளுநர் ஆர்.என். ரவி தன் பங்கிற்கு தூக்கிக் கொண்டு திரிகிறார்.
சாதி, சமய வேறுபாடுகள் இல்லாமல், அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வலி யுறுத்திய, சனாதனத்தின் எதிரியாக திகழ்ந்த அய்யா வைகுண்டரை சனாதனத்தின் காவ லர் என்று உளறிக் கொண்டு இருக்கிறார் ஆளுநர். ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் போல ஆளுநர் ஆர்.என். ரவி, இந்துத்துவ கோட் பாட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருவது கடுமையான கண்டனத்துக்குரியது” என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.