tamilnadu

விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவர்கள் சாதனை

விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி  மகப்பேறு மருத்துவர்கள் சாதனை

விழுப்புரம், ஜூலை 23 -  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தென் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வர் இளையராஜா. இவரு டைய மனைவி பிரியா (26) கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டதை யடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோத னையில் அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டும், வயிற்றில் ரத்தம் சேர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலை யில் இருப்பது தெரிய வந்தது.  அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி தலைமையில் நிலைய மருத்துவ அலுவலர் ரவிக் குமார், மகப்பேறு துறை தலைவர் மருத்துவர்கள் ராஜேஸ்வரி, சுஜாதா, மயக்கவியல் துறை மருத்து வர் அருண் சுந்தர், ரத்த வங்கி துறை தலைவர் விஜயா உள்பட மருத்து வக்குழுவினர் பிரியாவிற்கு கடந்த மாதம் 21 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்த னர். அறுவை சிகிச்சையில் அவருடைய வயிற்றில் தேங்கி இருந்த 2.5 லிட்டர் ரத்தத்தை அகற்றினர். பிரி யாவிற்கு உயிர் காக்கும் பொருட்டு தொடர் சிகிச்சை அளித்து 80 யூனிட் ரத்தம்  செலுத்தி ரத்தம் உறையும் காரணி பேக்டர் 7 செலுத் தப்பட்டது. இதுபோன்ற அதிக இரத்தப்போக்கு கார ணமாக ரத்தம் மற்றும் அதிக அளவு ரத்த மூலக்கூறுகள் செலுத்தி நோயாளியை காப்பாற்றியது மருத்து வத்துறையில் இதுவே முதல் முறையாகும். இந்த அறுவை சிகிச்சை யானது முதலமைச்சரின் விரி வான காப்பீடு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.6 லட்சம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நோயாளிக்கு ஒரு மாத காலம் தொடர் சிகிச்சைக்கு பிறகு கடந்த ஜூலை 21 ஆம்  தேதி திங்கட்கிழமை மருத்துவ கல்லூரி மருத்து வமனையிலிருந்து நல முடன் வீடு திரும்பினார். சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றி சாதனை படைத்த முண்டியம் பாக்கத்தில் உள்ள விழுப் புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினருக்கு பிரியா குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் நன்றி தெரிவித்தனர்.