tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு

ராணிப்பேட்டை, ஜூலை 20 - ராணிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலை வர் எஸ். ஜோசப் கென்னடி தலைமையில் நடைபெற்றது. இதில், அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் விஜயகுமார் உரையாற்றினார். தலைவராக செயல்பட்டு வந்த எஸ். ஜோசப் கென்னடி ஓய்வு பெற்ற நிலையில், மாவட்ட புதிய தலைவராக எழில் இளம்வழுதி தேர்வு செய்யப்பட்டார். ஊரக வளர்ச்சி முன்னாள் மாநில பொதுச் செயலாளர் எஸ். பாரி கூட்டத்தை  நிறைவுசெய்து பேசினார்.

கள்ளக்குறிச்சி அருகே  சாலை விபத்தில்  5 பேர் பலி

கள்ளக்குறிச்சி, ஜூலை 20- திருக்கோவிலூர்-விழுப்புரம் நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரி ழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாய மடைந்தனர். மணலூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து கார் சாலையோர பள்ளத்தில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்தவர்களில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். படுகாயமடைந்த ஐந்து பேர் உடனடி யாக மீட்கப்பட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரி ழந்தார். மேலும் ஒருவரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது. இதுகுறித்து மணலூர் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இல்லந்தோறும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு  

சென்னை, ஜூலை 20- சென்னை மாவட்டத்திலுள்ள நகர்ப்புற, ஊரகப் பகுதி களில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில்அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, கணக்கெடுப் பிற்காக ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட சமூக சேவை வழங்கும் நிறுவனங்களின் மூலம் ஈடுபடுத்தப்பட்டுள்ள முன்களப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக் கெடுப்பு நடத்தி, மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது. இப்பணி ஜூலை தொடங்கி, செப்டம்பர் இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக நடத்தப்படும் கணக் கெடுப்பிற்காக மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு வரும் முன்களப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.  கும்மிடிப்பூண்டியில் பா

மின்ஊழியர், பொறியாளர், ஓய்வுபெற்றோர் ஆர்ப்பாட்டம்

 வேலூர், ஜூலை 20 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலஅமைப்பு, மின்துறை பொறியாளர் அமைப்பு திருப்பத்தூர் கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்புமாநில துணைத்தலைவர் எஸ்.ஜோதி தலைமையில் நடைபெற்றது. பொறியாளர் அமைப்பு செயலாளர் ஜெ.ஏங்கல்ஸ், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் ஏ.ரங்கன், மின்ஊழியர் மத்திய அமைப்பின் திட்டக்கிளை தலைவர் டி.ஜெயபால், செயலாளர் கே.சந்திரசேகரன் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அரசாணை எண் 100ன் படி 12.02.2024-ல் ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்து, அரசு உத்திரவாதத்துடன் கூடிய ஒப்பந்தமாக மாற்ற வேண்டும். ஊதியக்குழுவால் வழங்கப்படும் உரிமைகளை பறிக்கும் வகையில் ஓய்வூதிய திட்ட, சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.