தமிழக அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் தொடர் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது. அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் பணிபுரிவதால், புற நோயாளிகள், உள் நோயாளிகள் பிரிவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அரசு உறுதி அளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து இருந்தனர். அதன்படி மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் சென்னையில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.