tamilnadu

img

ரூ.47 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை

சென்னை, டிச.27- தங்கத்தின் விலை கடந்த  மார்ச் தொடக்கத்திலிருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. செவ்வாய்க் கிழமை (டிச.26)  தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில், புதன்கிழமை மேலும் உயர்ந்தது.

அதன்படி, சென்னை யில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.47,200-க்கு விற்பனையானது. தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.