tamilnadu

மூளை அழற்சியை ஏற்படுத்தும்  பெரிய நில நத்தை ஊடுருவல்

மூளை அழற்சியை ஏற்படுத்தும்  பெரிய நில நத்தை ஊடுருவல்

சென்னை, செப்.9- சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் உலகிலேயே மிக மோசமான ஊடுருவும் உயிரினங்களில் ஒன்றான ராட்சச ஆப்பிரிக்க நத்தை (பெரிய நில நத்தை) பரவியுள்ளது.  இந்த நத்தைகள் மனிதர்களுக்கு மூளை அழற்சியை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளைச் சுமந்து செல்கின்றன. குறிப்பாக வெள்ளம் வரும் காலங்களில் இந்த நத்தைகள் வேகமாகப் பரவி, நகர்ப்புற மக்களுக்கு  ஆபத்தை விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.