மாபெரும் மறியல் போராட்டம் நடத்தி வேண்டும் பொதுத்தொழிலாளர் சங்கம் முடிவு
கோவை, ஜூலை 7- கோவை வடக்கு தாலுகா பொதுத்தொழிலாளர் சங்க நிர்வா கக்குழு கூட்டத்தில் வரும் 9 ஆம் தேதியன்று பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடத்திட முடிவு செய் யப்பட்டுள்ளது. கோவை வடக்கு தாலூகா பொதுத்தொழிலாளர் சங்க நிர்வா கக்குழு கூட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் சனியன்று நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு கூட்டத் திற்கு சங்கத்தலைவர் ஆர். கேசவ மணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச்செயலாளர் எஸ். கிருஷ் ணமூர்த்தி. மாவட்டத்தலைவர் மனோகரன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். சங்க பொதுச்செயலா ளர் நவ. சிவராஜன், பொருளா ளர் வி. தேவராஜ் மற்றும் சங்க நிர் வாகிகள் நிர்வாகக்கமிட்டி உறுப் பினர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில், ஜூலை 9 புதனன்று அனைத்து மத்திய தொழிற்சங்கங் களின் சார்பாக நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத் தத்தை ஒட்டி கோவை பெரியநாயக் கன்பாளையம் பேருந்து நிறுத்தத் திலிருந்து ஊர்வலமாச்சென்று பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள் ளது. சங்க உறுப்பினர்கள் அனை வரும் மேற்கண்ட போராட்டத்தில் திரளாக பங்கெடுத்து, ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கைவிட வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர் உள் ளிட்ட பென்சனர்களின் ஓய்வூ தியத்தை அதிகரிக்க வேண்டும். கிராமப்புற விவசாயிகள், விவசா யத் தொழிலாளர்கள் வாழ்வாதா ரத்தை பாதுகாக்கிற கடமையை நிறைவேற்றக் கோரியும், ஜிஎஸ்டி கொடுமையிலிருந்து சிறு, குறு தொழில்களை பாதுகாக்க வேண் டும். அத்தியாவசிய உணவுப்பண் டங்களின் விலையேற்றத்தை தடுக்க வேண்டும். படித்தும் வேலை யின்றி வீதியில் நிற்கும் இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். தொழிலா ளர் நலச்சட்டங்களை கைவிடும் ஒன் றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை தடுத்து நிறுத்தும் வகையில் மறியல் போராட்டத்தை வெற்றியடையச் செய்ய முடிவெ டுக்கப்பட்டது. மேலும், மறியல் போராட்டத்தை வெற்றிகரமாக்க சங்க உறுப்பினர்கள் அனைவரும் நேரடியாக மக்களை சந்திப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.